குழந்தை மொழிகள் கேட்க
பெரும் கவலை ஓடும் தூரம்
மொழிகள் எல்லாம் தேடும் ஒரு
மழலைப் பேச்சின் வாசம்
விழிகள் பாதி பேசும்
விரல்கள் கோர்த்து பேசும் ஒரு
குழந்தை மொழியை வெல்ல
ஏதும் இசைதான் உண்டா சொல்லு
சின்ன சின்ன சின்ன கவிதைகளை
தினம் அள்ளி அள்ளித் தரும்
குழந்தைகளே
வண்ண வண்ண கனா
கண்களிலே - நாளை
பிண்ண பிண்ண தினம்
படித்திடுங்கள்
பள்ளிக்கூடம் செல்லும்
சாலைகளில் நீங்கள் படித்திட
பல பாடமுண்டு
சொல்லித்தரும் நல் ஆசிரியர்
உடன் கற்றுக்கொள்ள பல
பழக்கமுண்டு
அன்னை தந்தையுடன்
தினம் பேசிடுங்கள்
நல்ல நல்ல வழியெது
பிடித்திடுங்கள்
அக்கம் பக்கமென
நடப்பவைகள்
அது என்ன என்னவென
கண்டிடுங்கள்
நட்புகளை தினம்
சேர்த்து வைத்து
புதுப் புது வழிகளும்
பிடித்திடுங்கள்
சொந்தங்களை கொஞ்சம்
படித்திடுங்கள்
சொந்தக் காலுக்கென நிதம்
படித்திடுங்கள்
வண்ண வண்ண கனா
கண்களிலே - நாளை
பிண்ண பிண்ண வந்த
செல்லங்களே
அவர் செய்பவற்றை
நீயும் செய்திடவே
கிளிப்பிள்ளையில்லை!
மிக தெளிந்திடுங்கள்
யாரோ செய்பவற்றை
நீயும் செய்திடவே
கிளிப்பிள்ளையில்லை!
மிக தெளிந்திடுங்கள்
உனக்கென பலர்
சேர்த்து வைத்த
பொக்கிஷத்தை தேடி
சேர்த்திடுங்கள்
யாரும் கொள்ளையிட்டு
செல்ல விட்டு விட நான்
பேபி பூமெர்ஸில்லையென
சொல்லிடுங்கள்
உன்னை நம்பியொரு இருக்கிற
காலம் நம்பும் படி
நடந்திடுங்கள்
முன்காலம் நடந்தவை
அறிந்துகொண்டு
புது காலம்
படைத்திட புறப்படுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக