புதன், 13 நவம்பர், 2024

செல்ல(லும்) கவிதை



குழந்தை மொழிகள் கேட்க 
பெரும் கவலை ஓடும் தூரம் 

மொழிகள் எல்லாம் தேடும் ஒரு
மழலைப்  பேச்சின்  வாசம்

விழிகள் பாதி பேசும் 
விரல்கள் கோர்த்து பேசும் ஒரு 
குழந்தை மொழியை வெல்ல 
ஏதும் இசைதான் உண்டா  சொல்லு 

சின்ன சின்ன சின்ன கவிதைகளை
தினம் அள்ளி அள்ளித் தரும்
குழந்தைகளே 

வண்ண வண்ண கனா 
கண்களிலே - நாளை 
பிண்ண பிண்ண தினம் 
படித்திடுங்கள் 

பள்ளிக்கூடம் செல்லும் 
சாலைகளில் நீங்கள் படித்திட 
பல பாடமுண்டு 

சொல்லித்தரும் நல் ஆசிரியர் 
உடன் கற்றுக்கொள்ள பல 
பழக்கமுண்டு 

அன்னை தந்தையுடன் 
தினம் பேசிடுங்கள் 
நல்ல நல்ல வழியெது 
பிடித்திடுங்கள் 

அக்கம் பக்கமென 
நடப்பவைகள் 
அது என்ன என்னவென 
கண்டிடுங்கள்  

நட்புகளை தினம் 
சேர்த்து வைத்து 
புதுப் புது வழிகளும்
பிடித்திடுங்கள் 


சொந்தங்களை கொஞ்சம் 
படித்திடுங்கள் 
சொந்தக் காலுக்கென நிதம்
படித்திடுங்கள்  

வண்ண வண்ண கனா 
கண்களிலே - நாளை 
பிண்ண பிண்ண வந்த  
செல்லங்களே 

அவர் செய்பவற்றை
நீயும் செய்திடவே
கிளிப்பிள்ளையில்லை!
மிக தெளிந்திடுங்கள்

யாரோ செய்பவற்றை
நீயும் செய்திடவே
கிளிப்பிள்ளையில்லை!
மிக தெளிந்திடுங்கள்

உனக்கென பலர்
சேர்த்து வைத்த 
பொக்கிஷத்தை தேடி 
சேர்த்திடுங்கள் 

யாரும் கொள்ளையிட்டு 
செல்ல விட்டு விட நான்  
பேபி பூமெர்ஸில்லையென
சொல்லிடுங்கள் 

உன்னை நம்பியொரு இருக்கிற 
காலம் நம்பும் படி 
நடந்திடுங்கள் 

முன்காலம் நடந்தவை 
அறிந்துகொண்டு 
புது காலம்
படைத்திட புறப்படுங்கள்

திங்கள், 11 நவம்பர், 2024

indian பாய்ஸ்!!!



சொல்லி வை 
கோலி

இப்ப holds the bat 


ball எல்லாம் பறக்குற stats  
 
fans கூட
fieldersஸும் பாக்கட்டுமே   மேட்ச்
மீறிப் போனா பந்து ஓட  
விழுந்தபடி வாட்ச்

தலைக்கு மேல
பறக்குது பார் six 

ஏகிறி குதிச்சாலும்
சிக்காத tricks 

சொல்லி வை 
ஷர்மா இப்ப 

turns the bat 

மேலப்பாத்து boundary பக்கம்
பறக்குது pull Shot  

bandage எல்லாம்
போட்டு வைச்சு

போட்டுக்கங்க bowl 

போட்ட bandage எல்லாம்
கிழிஞ்சபடி தெறிக்குமே ball 


பேட்டுல ஏறுதா  grip?


எங்க பாட்டுல கூடும் 
பேட்டுக்கு sharp  

india! india! india!!

பவரு எப்படி ஏறுதுன்னு 
தெரிஞ்சுக்கங்க cricks 


நாங்க குதிக்க குதிக்க 
கூடும் பாரு எங்களோட shots

சொல்லி வை 
ஜடேஜா இப்ப

bowls the ball 


ஸ்டம்ப்புக்கெல்லாம் நேரம் 
இப்ப நல்லா இல்ல பாஸ் 

பால பாக்க சுத்துமுங்க 
பாலப்போல  eye பால்ஸ் 

எங்க தான் அடிக்கிறது 
குழம்புமுங்க brain பாவம் cricks

இன்னும் முடியலை...

சொல்லிவை அடுத்து இப்ப 
வர்றதிப்ப அஸ்வின்!


தலை சுத்துதா இன்னுமிங்கே 
இருக்குதே

long  லிஸ்ட் 

ஏ ஏ ஏ ஏ 
இந்த படை போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா...


ஏ ஏ ஏ ஏ 
இந்த படை போதுமா... 
இன்னும் கொஞ்சம் வேணுமா...

சொல்லி வை 
அப்ப அப்ப கேப்
விட்டு விட்டு
விளாசுவோம் நாங்க

எங்க பேர கேட்டு பாரு 

Men  in Blue!

 
indian  பாய்ஸ்!!!




பிறந்த நாள் வாழ்த்து - மச்சி version


You tube link


எட்டு புள்ளி ரெண்டு
பில்லியன் மச்சி
உலகம் பூரா 

இருந்தாலும் 
அமைஞ்சதந்த நாலஞ்சு 
பேரு மச்சி - நம்ம 
தோஸ்து பட்சி 

கூடச் சேந்த 
பாவத்துக்கு உனக்கு 
வாழ்த்து மச்சி 
பிறந்தநாள் வாழ்த்து 
மச்சி 

என்கதையை கேக்க 
உன்கதையை  கேக்க 
ஆச்சு மச்சி வாழ்க்கை 


பேச்சுக்குதான் சேந்தோம் 
பேசி பேசி நீண்டோம் 
ஜோரு மச்சி வாழ்க்கை 
நீ கூட இருந்தா 
தூளு மச்சி வாழ்க்கை 

அதனால... 

வாழனும்  மச்சி கூட 
நூறு வர்சமாச்சும் மேல 
மச்சி 

சனி, 9 நவம்பர், 2024

பாத யாத்திரை

https://youtu.be/7uSmeKf2ros

நடக்கலாம் முருகன் கோவில்
கான்கார்ட்  முருகன் கோவில் 
கடக்கலாம் தூரம் தூரம் 
பெருக்கலாம் இன்பம் இன்பம்

நடக்கலாம் முருகன் கோவில்
கான்கார்ட்  முருகன் கோவில் 
கடக்கலாம் தூரம் தூரம்
பெருக்கலாம் இன்பம் இன்பம் 


கதையிலே முருகன் காத்த 
லோகங்கள் மூன்று லோகம்   - நம் 
கதைகளை சொல்லி வைப்போம் 
காத்திட முருகனுண்டு

கதையிலே முருகன் காத்த 
லோகங்கள் மூன்றொலோகம்  - நம் 
கதைகளை சொல்லி வைப்போம்
காத்திட முருகனுண்டு 


நல்லவை கோடி வைத்து 
நம்முடன் நடக்கும் சொந்தம் 
நம்ம ஊர் சொந்தம் சொந்தம் 
தமிழ் பேசிடும் உண்மை சொந்தம்

நல்லவை கோடி வைத்து 
நம்முடன் நடக்கும் சொந்தம் 
நம்ம ஊர் சொந்தம் சொந்தம்
தமிழ் பேசிடும் உண்மை சொந்தம் 


வேல் அவன் கையில் உண்டு 
கண்களில் கருணை கொண்டு 
புன்னகை பூத்த வண்ணம் 
நிற்பவன் செந்தில் கடவுள்

வேலவன் கையில் உண்டு 
கண்களில் கருணை கொண்டு 
புன்னகை பூத்த வண்ணம்
நிற்பவன் செந்தில் கடவுள் 


முயற்சி நம் வாழ்வில் கொண்டு 
முருகனின் தமிழை ஓதி  
நடந்திடும் நாட்கள் எல்லாம் 
தகர்ந்திடும் தடைகளெல்லாம்

முயற்சி நம் வாழ்வில் கொண்டு 
முருகனின் தமிழை ஓதி  
நடந்திடும் நாட்கள் எல்லாம்
தகர்ந்திடும் தடைகளெல்லாம் 

நின்றவன் வேலை நம்பு 
செய்திடும் வேலை உண்டு 
குவிக்கவே நம்பிக்கை கொண்டு 
வெற்றிகள் வேண்டி கொள்ளு 

நின்றவன் வேலை நம்பு 
செய்திடும் வேலை உண்டு 
குவிக்கவே நம்பிக்கை கொண்டு 
வெற்றிகள் வேண்டி கொள்ளு

நல்லதோர் வினைகள் செயிக்க 
நம்மவன் முருகன் செய்வான் 
நல்லன செயிக்க செயிக்க 
நடக்கிறோம் முருகன் கோவில் 
கான்கார்ட் முருகன் கோவில்  


வெள்ளி, 8 நவம்பர், 2024

பிறந்த நாள் வாழ்த்து



வாழ்த்து வாழ்த்து
தினம் கோர்த்து கோர்த்து
நீள்கவுன் நாட்களே  


நினைவெலாம் நல்லதே 
நீ நினைத்திட வல்லனே
நினைத்தவை யாவையும் 
நடந்திட வாழ்த்துகள் 

நீ நடத்திடும் செயல்தனில் 
விளையனும் வெற்றியே 
பேர் பெருக்கிடும் செயல்களில் 
உன் வயதெலாம் நிறையவே 

வாழ்த்துகள் வாழ்த்துகள்
பேர் பெரும் வாழ்த்துக்கள் 
உன் பிறந்த நாள் வாழ்த்துகள் 

கனிதரு சிறுமரம்



யானொரு தனிமரம் 
வேண்டிட மழை வரும் 

துணைவரும் தோப்பினில் 
யானொரு தனிமரம் 
 
அடைந்திடும் பறவைகள் 
சுவைத்திட கனி தரும் 
யானொரு தனிமரம் 

விதையிடு பறவையோ 
பறந்தது தூரமோ 
விளைத்தவர் வேறொரு 
மரத்தடி தூக்கமோ 

யானொரு தனிமரம் 
காற்றது தழுவிடும் 
சுவைத்திடும் தோப்பினில் 
யானொரு தனிமரம் 

இலையுதிர் காலமோ 
இறைந்தவை பறந்திட 
பதைப்புகள் நீளுமோ
கலைக்குமென் தூக்கமோ 


அங்கங்கு தனிமரம் 
துணையிலை அருகிலே 
துளைத்திடும் கேள்வியில் 
நின்றிட மழைவரும்
துளைத்திடும் கேள்விகள்
வெடித்திட மழைவரும் 


கடந்திட நடப்பவர் 
கைகளில் பறித்தவை 
கிடந்திட கொதிப்பனோ? 
நன்றிகள் கேட்பனோ?

மழைவர நனைகிறேன் 
வெயில்பட காய்கிறேன் 
என் நிழல்படு தரையினில் 
எனக்கொரு நிழலிலை 

மரமோ நீயென பிறர்
கடிபவர் நியாயமா?
மூச்சிழக்க கட்டையா?
உரைத்தலும் முறைதானோ?

கல்லெறி கைபடு 
நாபட சுவைக்கட்டும் 

காற்றிடம் தலையாட்டி 
வெயிலுடன் ஒளிச்சேர்த்து 
யென் மகரந்த சேர்க்கையை 
பிறர் சுவைத்திட 
தலைப்படும்
யானொரு தனிமரம் 


யானொரு தனிமரம்  
கனிதரு சிறுமரம் 

நினைவிலே கோவிலே

கம்பீர காலம்

ஓட்டமது குறையவில்லை

தகவல்,

செல்ல(லும்) கவிதை

குழந்தை மொழிகள் கேட்க  பெரும் கவலை ஓடும் தூரம்  மொழிகள் எல்லாம் தேடும் ஒரு மழலைப்  பேச்சின்  வாசம் விழிகள் பாதி பேசும்  விரல்கள் கோர்த்து பே...